பிள்ளையானுக்கு மேலும் 21 நாட்கள் தடுப்புக் காவல்

பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை மேலும் 21 நாட்கள் தடுப்புக் காவலில் வைப்பதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிள்ளையானிடம் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்ற காரணத்தினால் மேலும் 21 நாட்கள் கால அவகாசம் தேவைப்படுவதாக குற்றப் புலனாய்வுப்பிரிவினர் மன்றுக்கு அறிவித்ததற்கு அமைவாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மீறல் தொடர்பான மனு மீதான விசாரணை இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதன் நிமித்தம் பிள்ளையானின் சட்டத்தரணியான முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில நேற்று குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு சென்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானைச் சந்தித்துள்ளார்.

இதன்போது வழக்கு தொடர்பில் அவருடன் கலந்துரையாடியதாக உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில்இ பிள்ளையான் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதும் கிழக்கின் பேராசிரியர் ஒருவர் காணாமலாக்கப்பட்டமை தொடர்பிலேயே அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இதன்படிஇ தடுப்புக் காவல் உத்தரவுக்கு அமைய சுமார் ஏழரை மாதங்கள் பிள்ளையான் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.