போதைப்பொருளுடன் அரச பேருந்து சாரதி கைது

மஸ்கெலியா நிருபர்.

அரச பேருந்து சாரதியொருவர் போதைப்பொருள் வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சாரதி நேற்று வியாழக்கிழமை நல்லதண்ணி பகுதியிலுள்ள பேருந்து நிலைய தங்குமிட விடுதியில் வைத்து நல்லதண்ணி பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேகநபரிடமிருந்து 2 போதை வில்லைகளும் 77 மில்லி கிராம் ஹெரோயிளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஹட்டன் அரச பேருந்து நிலையத்தில் சாரதியும் வட்டவளை பகுதியை சேர்ந்தவரும் என ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேகநபர் ஹட்டன் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், மேலதிக விநசாரணைகளை நல்லத்தண்ணி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.