
குளவி கொட்டுக்கு இலக்கான பெண் தொழிலாளி வைத்தியசாலையில்
மஸ்கெலியா நிருபர்.
சாமிமலை ஸ்டோகஹோம் தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டு இருந்த வேளை குளவி கொட்டுக்கு இலக்கான பெண்ணொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தேயிலை செடியின் கீழ் பகுதியில் இருந்த குளவி கலைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
65 வயதுடைய பெண் தொழிலாளியொருவரே இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
			
