இருளிழ் மூழ்கிய புகையிரத கடவைகள்

-கிண்ணியா நிருபர்-

திருகோணமலை தம்பலகாமம் புகையிரத நிலையத்தின் அண்மித்த வீதிகள் இருளில் மூழ்கியுள்ளது. இதனால் இரவு நேர புகையிரத சேவை உரிய புகையிரத நிலையத்துக்கு வந்து தரித்து செல்லும் பொது கிண்ணியா தம்பலகாமம் பிரதான வீதி கடவையின் உள்ள பகுதி தெரு விளக்குகளும் செயல் இழந்த நிலையில் உள்ளது. இதனால் விபத்துக்கள் ஏற்பட கூடிய வாய்ப்பு காணப்படுகிறது.

தம்பலகாமம் புகையிரத நிலையத்துக்கு திருகோணமலையில் இருந்து கொழும்பு செல்லும் புகையிரத வண்டி இரவு 8.02 மணிக்கு வருகை தருகிறது. இதன் போது பிரதான வீதியில் உள்ள புகையிரத கடவைக்கு வீதி சமிக்ஞை பொருத்தப்படாது ஊழியர் மூலமாக டோச் லைட் மூலமாக கண்காணிக்கப்படுகிறது.

இப் பகுதியில் ஓரிரு மின் கம்பங்கள் இருந்தும் குறித்த தெரு விளக்குகள் பல நாட்களாக ஒளிர்வதில்லை இதனால் பாதசாரிகள் பல அசொகரியங்களை எதிர்நோக்குகின்றனர். இது போன்று பல பகுதிகளிலும் குறிப்பாக சிராஜ் நகர் புகையிர கடவையின் தெரு விளக்கு உள்ளிட்ட பல இடங்களில் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. எனவே விபத்தை வரும் முன் தடுக்க உரிய அதிகாரிகள் கவனம் எடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.