கிண்ணியாவில் விபத்து

-மூதூர் நிருபர்-

கிண்ணியா – கண்டி பிரதான வீதி, முனைச்சேனை பகுதியில், சிறிய ரக லொறி ஒன்று, வேகக் கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகி, விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து, இன்று வியாழக்கிழமை காலை முனைச்சேனை சுமையா அரபு கல்லூரிக்கு முன்னால் இடம்பெற்றுள்ளது.

சூரங்கல் பகுதியில் இருந்து கிண்ணியா நோக்கி வந்து கொண்டிருந்த வாகனமே, இவ்வாறு விபத்துக்குள்ளானதாகவும், தெய்வாதீனமாக எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து குறித்து, மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.