திருகோணமலையில் கவியரங்க நிகழ்வு
-கிண்ணியா நிருபர்-
தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு திருகோணமலை தமிழ் அமுதம் கலை வட்டம் மற்றும் திருகோணமலை மாநகர சபை பொதுநூலகத்தின் ஏற்பாட்டில் ” மறுமலர்ச்சிக்காக வாசிப்போம்” என்ற தலைப்பில் கவியரங்க நிகழ்வு நேற்று புதன்கிழமை பொது நூலக கேட்போர் கூடத்தில் தமிழ் அமுதம் கலை வட்டத்தின் தலைவி கவிஞர் திருமதி. சு.யுவராஜா தலைமையில் இடம் பெற்றது.
நிகழ்வில் திருகோணமலை மாநகராட்சி சபையின் மேயர். க.செல்வராஜா ( சுப்ரா) முதன்மை விருந்தினராக கலந்து கொண்டிருந்தார்.
இக் கவியரங்கில் கவிஞர்களான அமீர்டீன் முகம்மட், அரசரெத்தினம் அச்சுதன், ஏ.ஜே.எம்.சாலி, கவிச்சுடர் சிவரமனி, ஞா. நிரோயினி, ஜெயராஜா கிருஷந்ஷின், திருமதி. த. வசந்தகுமார் ஆகியோர் கவிபாடினர்.
இந் நிகழ்வில் திருகோணமலை மாநகர சபை பொது நூலகத்தின் நூலகர் மு. லெ. றிம்சானா, நூலக உத்தியோகத்தர்கள், சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ். முரளிதரன், உள்ளூராட்சி உதவியாளர் திருமதி. வி. கலைமதி, பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


