
மக்கள் குடியிருப்புக்குள் வந்த புலி : இரண்டு இளைஞர்கள் கைது!
புலி வருகிறது புலி வருகிறது என்று நகைச்சுவையாக சொல்லிக்கொண்டிருக்க ஒரு நாள் உண்மையாகவே புலி வந்ததாக பழமையான கதை ஒன்று உள்ளது. இந்த கதை போன்ற ஒரு சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.
AI மூலம் புலியை நகருக்குள் வரவழைத்த இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியா லக்னோவில் உள்ள பகுதியொன்றில் இளைஞர் ஒருவர் எடுத்த செல்பி புகைப்படத்தில் புலி பதிவாகியுள்ளது.
குறித்த புகைப்படத்தை குறித்த இளைஞர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இதனைத்தொடரந்து அந்த புகைப்படம் வைரலாகியது.
லக்னோவில் உள்ள பல பகுதிகளில் தெருக்களில் புலியின் நடமாட்டம் அதிகரித்து விட்டதாக தகவல்கள் பரவியது. அதன் விளைவாக மக்கள் பீதியடைந்துள்ளனர்.
அதனைத்தொடர்ந்து வனஇலாக்கா அதிகாரிகள் புலியை பிடிக்க வந்த போது மேற்கொண்ட விசாரணையில் சமூக வலைத்தளங்ளில் பரவிய புகைப்படத்தில் இருந்த புலி போலியானது என கண்டறியப்பட்டது.
புகைப்படத்தை பதிவிட்ட இளைஞனும் மற்றுமொரு இளைஞனும் இணைந்து AI மூலம் இவ்வாறு புலியின் படத்தை உருவாக்கியது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து குறித்த இளைஞர்கள் மீது முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
