
தங்கத்தின் விலையில் இன்றும் வீழ்ச்சி!
நாட்டில் தங்கத்தின் நேற்று செவ்வாய்க்கிழமையுடன் ஒப்பிடும்போது, இன்று புதன்கிழமை விலை 2000 ரூபாய் குறைந்துள்ளது.
அதன்படி, இன்று புதன்கிழமை காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 294,000 ரூபாயாகக் குறைந்துள்ளது.
நேற்று, இதன் விலை 296,000 ரூபாயாக காணப்பட்டது.
இதற்கிடையில், நேற்று 320,000 ரூபாவாகவிருந்த 24 கரட் ஒரு பவன் தங்கத்தின் விலை இன்று 318,000 ரூபாயாகக் குறைந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
