புதிய கட்டிட திறப்பு விழா
-மஸ்கெலியா நிருபர்-
லக்கம் ஆரம்ப வித்தியாலயத்தின் புதிய கட்டிட திறப்பு விழா பாடசாலை அதிபர் திருமதி. விஜயகாந்தி அம்மையாரின் தலைமையில், நேற்று செவ்வாய்க்கிழமை
மிக சிறப்பாக இடம்பெற்றது.
IMHO நிறுவனத்தின் முழுமையான அனுசரனையில் இந்த கட்டிடம் அமைக்கப்பட்டது.
இந்த நிகழ்வுக்குபிரதம அதிதிகளாக
மாகாண கல்வி அமைச்சின் பிரதான செயலாளர் திருமதி.மதுபானி பியசேனா அம்மையார் அவர்களும். IMHO நிறுவனத்தின் பணிப்பாளரும், california stemfort பல்கலைகழகத்தின் பேராசிரியருமான. திருமதி. யசோதா நட்குனம் அம்மையார்.
அவர்களும், ஹட்டன் கல்வி வலய பண்ணிப்பாளர் திரு. நாமல் சந்தன குமார அவர்களும், IMHO நிறுவனத்தின் செயட்திட்ட பண்ணிப்பாளர் திரு. கந்தையா விக்னேஷ்வரன் அவர்களும் கலந்து கொண்டார்கள். மற்றும் சிறப்பு விருந்தினார்களாக ஹட்டன் வலய உதவி பண்ணிப்பாளர், ஆரம்ப பிரிவின் உதவி பண்ணிப்பாளர், கோட்டக்கல்வி பண்ணிப்பாளர், தோட்ட முகாமையாளர், மஸ்கெலியா போலீஸ் அதிகாரி, மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி, ஆசிரிய ஆலோசகர்கள். அயல் பாடசாலை அதிபர்கள், மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள்,பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள், அனைவரும் கலந்து சிறப்பித்தார்கள்.
