பத்தேகம உப தவிசாளரை தாக்கிய நபருக்கு விளக்கமறியல் உத்தரவு
பத்தேகம பிரதேச சபையின் உப தவிசாளர் மீதான தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் 4 நாள்கள் தலைமறைவாக இருந்த பின்னர் சட்டத்தரணி மூலம் போத்தல பொலிஸில் சரணடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பின்னர் சந்தேக நபர் காலி பிரதான நீதவான் சமீர தொடம்கொட முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
பத்தேகம பிரதேச சபையின் உப தவிசாளர் சமன் சி. லியனகே கடந்த 24 ஆம் திகதி சந்தேக நபரால் தாக்கப்பட்டதாகவும், தாக்குதலில் காயமடைந்த உப தலைவர் காலி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் போத்தல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
