தேடப்பட்டுவந்த மூவர் கைது

கொழும்பு மற்றும் வவுனியாவில் ஆயுதங்கள் மீட்கப்பட்டமை தொடர்பில் தேடப்பட்டு வந்த மூன்று சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட நிலையில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.