காசாவில் கடுமையான தாக்குதல் நடத்த நெதன்யாகு உத்தரவு

காசா பகுதியில் கடுமையான தாக்குதலை நடத்த இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

உடனடியாக தாக்குதலை நடத்துமாறு இஸ்ரேலிய இராணுவத்துக்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மத்தியஸ்தம் வகித்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் மீண்டும் மீண்டும் மீறி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில் ஹமாஸுக்கு எதிராகக் கடுமையான தாக்குதல்களை நடத்தப் போவதாக இஸ்ரேலிய பிரதமர் அறிவித்துள்ளார்.