கொழும்பிலுள்ள 4 கட்டடங்களில் புதிய மேல் நீதிமன்றங்கள் அமைக்க அனுமதி

நாட்டில் புதிய மேல் நீதிமன்றங்களை துரிதமாக நிறுவும் நடவடிக்கைகளுக்காக, பொது நிருவாக அமைச்சின் கட்டுப்பாட்டில் இருந்த நான்கு கட்டடங்களை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஊழல் எதிர்ப்பு தேசிய செயற்பாட்டுத் திட்டம் (2025-2029) இன் கீழ், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

அதன்படி, புதிய மேல் நீதிமன்றங்களைத் தாபிக்கும் பணியை நடைமுறைப்படுத்துவதற்காக, பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைய, கொழும்பிலுள்ள பின்வரும் நான்கு முகவரிகளில் அமைந்துள்ள கட்டடங்கள் நீதி அமைச்சுக்குக் கையளிக்கப்படவுள்ளன.

இலக்கம் B 88, கிறகெரி வீதி, கொழும்பு 07
இலக்கம் C 76, பௌத்தாலோக்க மாவத்தை, கொழும்பு 07
இலக்கம் B 108, விஜேராம வீதி, கொழும்பு 07
இலக்கம் B 12, ஸ்டென்மோர் சந்திரவங்கய, கொழும்பு 07

புதிய நீதிமன்றங்களை அமைப்பதன் மூலம் நீதிச் செயற்பாடுகளைத் துரிதப்படுத்துவதுடன், தேசிய ஒருமைப்பாட்டு இலக்குகளை அடைவதும் இந்த நடவடிக்கையின் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.