தேங்காய் விலை உயர்வு
இடைத்தரகர்கள் தேங்காயை 134 ரூபாவுக்கு வாங்கி 180 ரூபாவுக்கு விற்பதன் மூலம் சுமார் 40 முதல் 50 ரூபாய் வரை லாபம் ஈட்டுவதாக தென்னை பயிர்செய்கை சபை தெரிவித்துள்ளது.
தேங்காய்களுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்காமையே இந்த நிலைக்கு காரணம் என தென்னை பயிர்செய்கை சபையின் தலைவர் சுனிமல் ஜெயக்கொடி தெரிவித்தார்
இந்த நிலைமையை கட்டுப்படுத்த தேங்காயை சந்தையிலிருந்து குறைந்த விலையில் கொடுக்குமாறு அவர் வலியுறுத்தினார்.
தென்னை பயிர்செய்கை சபை மற்றும் தென்னை அபிவிருத்தி அதிகாரசபை ஆகியவை இணைந்து தேங்காய் ஏலத்திற்கான கூட்டு பரிந்துரையை கலந்துரையாடி வருகின்றன.
தேங்காய் உற்பத்தி கடந்த ஆண்டு 2,754 மில்லியன் தேங்காய்களிலிருந்து இந்த ஆண்டு 2,800 மில்லியன் தேங்காய்களாக உயர்ந்துள்ளது.
அரசாங்கத்தின் மேம்படுத்தப்பட்ட திட்டங்களுடன் இணைந்து அடுத்த மூன்று ஆண்டுகளில் தேங்காய் உற்பத்தி 4,200 மில்லியன் தேங்காய்களை எட்டும் என தென்னை பயிர்செய்கை சபை எதிர்பார்க்கின்றது.
இந்த நடவடிக்கைகள் நியாயமான விலையை உறுதி செய்தல், சந்தை ஸ்திரத்தன்மையை மேம்படுத்துதல் மற்றும் இலங்கையில் தேங்காய் தொழில்துறையின் வளர்ச்சியை அதிகரித்தல் போன்றவற்றை நோக்கமாக கொண்டுள்ளதாக தென்னை பயிர்செய்கை சபையின் தலைவர் தெரிவித்துளளார்.
