மதுபானம் தொடர்பாக புதிய வர்த்தமானி அறிவிப்பு!

மதுபானம் தொடர்பாக புதிய வர்த்தமானி அறிவிப்பு ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ளது.

மதுபான உற்பத்திக்கான வரி செலுத்துதல் மற்றும் கட்டணம் வசூலித்தல் தொடர்பான விதிகள் இதில் அடங்கும்.

இன்று செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வரும் வகையில், நிதி மற்றும் பொருளாதார அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இந்த வர்த்தமானியை வெளியிட்டார்.

கலால் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 22 இன் படி, ஒவ்வொரு உரிமதாரரும் உரிய திகதியில் அல்லது அதற்கு முன் கலால் வரியை செலுத்த வேண்டும் என்று வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, குறிப்பிட்ட திகதியிலிருந்து 30 நாட்களுக்குள் உரிமையாளர் உரிய வரி அல்லது கட்டணத்தை முழுமையாக செலுத்தத் தவறினால், புதிய வர்த்தமானியில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடிஇ அவர்களின் உரிமம் இடைநிறுத்தப்படும்.

இந்த ஒழுங்குமுறை முன்னர் அமல்படுத்தப்படவில்லை என்றும், இப்போது ஒரு புதிய சட்ட ஏற்பாடாக அறிமுகப்படுத்தப்படுவதாகவும் கலால் துறை குறிப்பிட்டது.

கூடுதலாக, வரி அல்லது கட்டணம் உரிய திகதியிலிருந்து 90 நாட்களுக்கு மேல் செலுத்தப்படாமல் இருந்தால், புதிய வர்த்தமானியின்படி, தனிநபரால் வைத்திருக்கும் அனைத்து உரிமங்களும் இடைநிறுத்தப்படும்.

முன்னதாக, உரிமங்களுக்கான இடைநீக்க காலம் ஆறு மாதங்களாக இருந்தது, ஆனால் புதிய விதிமுறை இதை மூன்று மாதங்களாகக் குறைத்துள்ளதாக கலால் துறை தெரிவித்துள்ளது.

கலால் துறையில் வரி ஏய்ப்பைக் குறைக்கும் நோக்கில் வரி செலுத்தும் காலக்கெடு திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.