வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்லும் தொழிலாளர்களின் எண்ணிக்கையில் குறைவு

இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, இந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் சென்ற இலங்கைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 5% குறைந்துள்ளது.

உள்ளூர் பொருளாதார நிலைமைகளில் ஏற்பட்ட முன்னேற்றமும் உள்ளூர் ஊதியங்களில் ஏற்பட்ட அதிகரிப்புமே இதற்கு முதன்மையான காரணம்.

2025 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் 143,037 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் சென்றுள்ளனர்.