
சந்தேக நபர்களின் காணொளிகளைப் பகிர்வது தொடர்பில் சட்ட வல்லுநர்கள் விசனம்
கைது செய்யப்பட்ட பின்னர், சந்தேக நபர்களின் காணொளிகளை பிரதான ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் பகிர்வதில் காவல்துறையினரின் நடத்தை குறித்து சட்ட வல்லுநர்கள் கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளனர்.
அத்துடன், இதுபோன்ற நடவடிக்கைகள் எதிர்கால விசாரணைகள் மற்றும் எதிர்கால வழக்குகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்று எச்சரித்துள்ளனர்.
இலங்கை வழக்கறிஞர்கள் சங்கத்தின் (BASL) முன்னாள் தலைவர் சாலிய பீரிஸ், தனது முகநூல் பதிவில் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
கைதுகள் மற்றும் குற்றவியல் விசாரணைகள் சட்டத்தால் நிறுவப்பட்ட நடைமுறையின்படி கண்டிப்பாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அத்துடன், இவ்வாறான செயற்பாடுகள் புலனாய்வாளர்களின் தொழில்முறையை கேள்விக்குள்ளாக்குகின்றது என்றும் முழு அமைப்புக்கும் அவப்பெயரை ஏற்படுத்துகிறது, என்று அவர் மேலும் கூறினார்.
சாட்சியக் கட்டளைச் சட்டத்தின் கீழ், ஒரு பொலிஸ் அதிகாரியிடம் அளிக்கப்படும் எந்தவொரு வாக்குமூலத்தையும் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு எதிராக நிரூபிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இலங்கை வழக்கறிஞர்கள் சங்கத்தின் (BASL) வட்டாரம் ஒன்று, டீயுளுடு நிர்வாகக் குழு விரைவில் கூடி இந்த விவகாரம் குறித்து விவாதிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
