
இலங்கை அணியின் உப தலைவராக தசுன் ஷானக்கவை நியமிக்க வாய்ப்பு
பாகிஸ்தான் தொடருக்கான இலங்கை அணியின் உப தலைவராக தசுன் ஷானக்க நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை அணி அண்மையில் மேற்கொண்ட சர்வதேசப் சுற்றுப் பயணங்களில் உப தலைவர் எவரும் நியமிக்கப்படவில்லை.
எனினும், அசலங்கவின் தலைமைத்துவத்துக்கு ஆதரவளிக்கும் நோக்கில், உப தலைவர் பொருப்பை மீண்டும் அறிமுகப்படுத்தத் தெரிவுக்குழுவினர் பரிசீலித்து வருகின்றனர்.
அணியில் அதிக அனுபவமுள்ள T20 வீரர்களில் ஒருவராக தசுன் ஷானக்க காணப்படுவதுடன், அவரது முந்தைய தலைமைத்துவ அனுபவத்தின் காரணமாக அவர் உப தலைவர் பதவிக்கு ஒரு வலுவான தெரிவாகக் கருதப்படுகிறார்
