3500 மெட்ரிக் தொன் பொன்னி சம்பா இறக்குமதி
உள்ளூர் சந்தையில் கீரி சம்பா அரிசி பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய 3500 மெட்ரிக் தொன் பொன்னி சம்பா அரிசி நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
GR 11 பொன்னி சம்பா அரிசியை கடந்த 15ஆம் திகதி முதல் இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியது.
அதன் முதல் தொகுதி கடந்த 23ஆம் திகதி நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது .
அதன் மற்றுமொரு தொகுதி கடந்த வெள்ளி, சனிக்கிழமைகளில் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் உணவுக் கொள்கை, பாதுகாப்புக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஒரு இறக்குமதியாளருக்கு அதிகபட்சமாக 520 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் மதிப்பிடப்பட்ட வருடாந்த அரிசி நுகர்வு சுமார் 2.4 மில்லியன் மெட்ரிக் தொன் என்பதுடன், இதில் கீரி சம்பாவின் ஆண்டு நுகர்வு 10 %, அதாவது, சுமார் 200,000 மெட்ரிக் தொன்னாகும் .
