சொறிக்கல்முனை சின்னமடுமாதா ஆலயத்திருவிழா

-அம்பாறை நிருபர்-

திருவிழா திருப்பலியானது நேற்று சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இன்று ஞாயிற்றுக்கிழமை திருச்சிலுவை திருத்தலத்தில் இருந்து காலை 6:00 மணிக்கு இறைமக்களினால் பாதயாத்திரையும் இடம்பெற்றதோடு, சின்னமடுமாதா ஆலயத்தில் காலை 8:00 மணிக்கு அருட்பணி R.வினோஜன் (சொமஸ்கன் சபை) மற்றும் பங்குத்தந்தை ஜுனோ சுலக்சன் அடிகளாரின் தலைமையிலும் திருவிழா திருப்பலி நிகழ்வுகள் ஒப்புக்கொடுக்கப்பட்டு இறுதியில் மாதாவின் ஆசீரும் வழங்கப்பட்டு கொடியிறக்கமும் இடம்பெற்றது. இதில் அருட்சகோதரிகளும், பல இறைமக்களும் கலந்துகொண்டு சிறப்பித்தர்.