சிவனடி பாத மலைக்கு செல்லும் வீதியில் உள்ள அம்பலத்தை சீர் செய்ய கோரிக்கை

-மஸ்கெலியா நிருபர்-

கடந்த சில நாட்களாக மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் கன மழை காற்று காரணமாக சிவனடி பாத மலைக்கு செல்லும் வீதியில் கங்குலதென்ன பகுதியில் உள்ள யாத்திரிகர்கள் தங்கி செல்லும் மடத்தின் கூறை காற்றில் அல்லுண்டு சென்றுள்ளது.

அதன் காரணமாக மஸ்கெலியா பிரதேச சபை மற்றும் சிவனடி பாத மலைக்கு பொறுப்பான விகாராதிபதி முன் வந்து இந்த மடத்தை உடன் சீர் செய்து தருமாறு வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் மற்றும் உள்நாட்டு யாத்திரிகர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

அத்துடன் எதிர் வரும் டிசம்பர் மாதம் வரும் பௌர்ணமி நாளில் பருவகாலம் ஆரம்பிக்க படும் ஆகையால் முன் கூட்டியே இந்த மடம் செப்பனிட வேண்டும்.