மழையினால் கைவிடப்பட்ட மற்றுமொரு போட்டி

 

மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இன்றைய போட்டி (வெள்ளிக்கிழமை) மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.

கொழும்பு ஆர் பிரேமதாச விளையாட்டாரங்கில் இடம்பெற்ற இந்த போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகள் மோதின.

போட்டியின் நாணய சுழட்சியில் வெற்றி பெற்ற இலங்கை மகளிர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி பாகிஸ்தான் அணி துடுப்பெடுத்தாடிய நிலையில், போட்டியில் மழை குறுக்கிட்டது.

இதற்கமைய தொடர்ந்து மழை பெய்ததால் போட்டி கைவிடப்பட்டுள்ளது.