வாதுவை சுற்றலா விடுதியில் தீ விபத்து
வாதுவையில் உள்ள சுற்றலா விடுதி ஒன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக வாதுவை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தீ பரவல் நேற்று வியாழக்கிழம அதிகாலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சுற்றலா விடுதியின் இரண்டாவது மாடியிலேயே இவ்வாறு தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
களுத்துறை மாநகர சபையின் தீயணைப்பு படையினர் இணைந்து தீ பரவலை கட்டுப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீ பரவலை கட்டுப்படுத்த களுத்துறை மாநகர சபையின் 2 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தீ பரவலின் போது எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாதுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
