
ஒருநாள் தொடரை வென்றது அவுஸ்திரேலியா
இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒருநாள் போட்டி அடிலெய்டில் இன்று நடைபெற்றது.
இதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 264 ஓட்டங்களை பெற்றது .
இந்தநிலையில் அவுஸ்திரேலிய அணிக்கு 265 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதற்கமைய வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றி இலக்கை கடந்தது.
இந்த வெற்றி மூலம் 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி அடிலெய்டு மைதானத்தில் தோல்வியை சந்தித்துள்ளது
அத்துடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை அவுஸ்திரேலிய அணி கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
