
சுவிட்சர்லாந்தில் புயல் குறித்து எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு
சுவிட்சர்லாந்தில் புயல் வீசும் என்றும் கடுமையான காற்று மற்றும் பரவலான புயல் சேதம் ஏற்படக் கூடும் என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது. எச்சரிக்கப்பட்டுள்ளது.
தாழ்வான பகுதிகளில் மணிக்கு 80 முதல் 90 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
உயர்ந்த பகுதிகளில், சூறாவளி போன்று மணிக்கு 160 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.
ஆல்ப்ஸ் மலை அடிவாரத்தில் இருந்து மத்திய பீடபூமி வரை நாட்டின் பெரும் பகுதிகள் பாதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
