அதிக சதம் – ஸ்மிருதி மந்தனா சாதனை

மகளிர் ஒருநாள் போட்டியில் அதிக சதம் விளாசியவர்கள் பட்டியலில் ஸ்மிருதி மந்தனா 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

நியூசிலாந்து மகளிர் அணிக்கெதிரான போட்டியில் அவர் குறித்த மைல்கல்லை எட்டினார்.

இதன்படி ஸ்மிருதி மந்தனா மகளிர் ஒருநாள் போட்டியில் 14 சதங்களை விளாசியுள்ளார்.

குறித்த பட்டியலில் அவுஸ்திரேலியாவின் மெக் லேனிங் 15 சதத்துடன் முதலிடத்தில் தொடர்கிறார்.

மேலும் இந்த ஆண்டில் தனது ஐந்தாவது சதத்தை மந்தனா பூர்த்திசெய்துள்ளார்.

இதன் மூலம் ஒரு ஆண்டில் அதிக சதங்கள் விளாசிய தென்னாப்பிரிக்க வீராங்கனை டாஸ்மின் பிரிட்ஸின் சாதனையை மந்தனா சமன் செய்துள்ளார்.