சிவனடி பாத மலைக்கு செல்லும் பாலத்தில் விபத்து ஏற்படும் அபாயம்
-மஸ்கெலியா நிருபர்-
ஹட்டன் நல்லதண்ணி பிரதான வீதியில் உள்ள நல்லதண்ணி நகரில் இருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிவனடி பாத மலைக்கு செல்லும் பிரதான சாலையில் ( ரது ) சிவப்பு பாலத்திற்கு போடபட்ட கொங்கிரீட் உடைந்து போன நிலையில் உள்ளது.
இதனால் பாரிய விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
எதிர் வரும் டிசம்பர் மாதம் வரும் பௌர்ணமி நாளில் சிவனடி பாத மலை பருவகாலம் ஆரம்பமாகி தொடர்ந்து ஆறு மாதங்கள் இடம் பெறும்.
அக் காலத்தில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து விட்டு செல்வார்கள் அத்துடன் உள்நாட்டு வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் அதிக அளவில் வந்து செல்லும் காலம்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் சிவனடி பாத மலைக்கு பொறுப்பான விகாராதிபதி மற்றும் நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் நோர்வூட் பிரதேச செயலாளர் மற்றும் மஸ்கெலியா பிரதேச சபை முன் வந்து இந்த பிரதான பாலத்தை செப்பனிட்டு யாத்திரிகர்கள் உயிர் பாதுகாக்க வேண்டும் என அப் பகுதியில் உள்ள மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
