லங்கா பிரீமியர் லீக் தொடர் ஒத்திவைப்பு

 

2025 ஆம் ஆண்டு திட்டமிட்டபடி லங்கா பிரீமியர் லீக் (LPL) போட்டிகள் இந்த ஆண்டு நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் இதனை அறிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு பெப்ரவரி -மார்ச் மாதங்களில் இடம்பெறவுள்ள டி20 உலகக் கிண்ண தொடரை கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.