
கொழும்பு-மன்னார் சொகுசு பேருந்து விபத்து : காயமடைந்த இளைஞர் உயிரிழப்பு!
-மன்னார் நிருபர்-
கொழும்பிலிருந்து மன்னார் நோக்கிஇ நேற்று செவ்வாய்க்கிழமை இரவு, பயணிகளுடன் பயணித்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று, மன்னார்-மதவாச்சி பிரதான வீதி பெரியகட்டு பகுதியில் இன்று புதன்கிழமை விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சாரதியின் நித்திரை கலக்கத்தால் குறித்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக, தெரிய வருகிறது.
விபத்தில் பலர் காயமடைந்து, செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மன்னார் முருங்கன் பகுதியை சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
