மட்டக்களப்பில் இருந்து பயணித்த புகையிரதத்தில் மோதி காட்டு யானை உயிரிழப்பு!

மட்டக்களப்பில் இருந்து மஹாஓய நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி, காட்டு யானை உயிரிழந்துள்ளது.

இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பில் இருந்து மஹாஓயா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த புகையிரதத்தில், அசேலபுரத்துக்கும் வெலிக்கந்தைக்கும் இடைப்பட்ட பகுதியில் வைத்து, காட்டு யானை ஒன்று மோதி உயிரிழந்துள்ளதாக, புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.