மூளையில் ஏற்பட்ட கிருமி தொற்றால் உயிரிழந்த பச்சிளம் சிசு!

-யாழ் நிருபர்-

யாழில் பிறந்து 25 நாட்களேயான ஆண் சிசு ஒன்று, நேற்று செவ்வாய்க்கிழமை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

ஆதித்தியன் கிருஷாளினி என்ற தம்பதிகளின் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

குழந்தைக்கு கடந்த முதலாம் திகதி காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதன வைத்தியசாலை சேர்ப்பிக்கப்பட்ட போது, சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளது.

குழந்தையின் சடல மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.

மூளையில் ஏற்பட்ட கிருமி தொற்று காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.