யாழில் மழையுடன் கொட்டிய மீன்கள்!

யாழ்ப்பாணத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை பெய்த மழையில் மழையுடன் சேர்ந்து மீன்களும் விழுந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று அதிகாலை தொடக்கம் தொடர்ச்சியாக யாழில் மழை பெய்து வந்த நிலையில் இவ்வாறு மழைநீருடன் சேர்ந்து மீன்களும் விழுந்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

அவ்வாறு நிலத்தில் விழுந்த மீன்களை சிலர் பிடித்து நீருக்குள் விட்டதாகவும் கடந்த காலங்களிலும் இவ்வாறு மழையுடன் மீன்கள் விழுந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.