பாகிஸ்தான் அணிக்கு புதிய ஒருநாள் தலைவர்

 

ஒருநாள் போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியின் புதிய தலைவராக ஷகீன் ஷா அப்ரிடி நியமிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் அணியின் (ஒருநாள் மற்றும் டி20) தலைமை பயிற்றுவிப்பாளரான மைக் ஹெசன், உயர் செயற்திறன் இயக்குனர் அகிப் ஜாவேத் உள்ளிட்டோர் கலந்து கொண்ட கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி ஷகீன் ஷா அப்ரிடியின் பதவிக்காலம் நவம்பர் மாதம் நடைபெற உள்ள தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து ஆரம்பமாகவுள்ளது.

இவர் ஏற்கனவே பாகிஸ்தான் டி20 அணியின் தலைவராக செயற்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.