
கனமழை காரணமாக கொழும்பின் பல வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்!
கொழும்பின் பல வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்தும் பதிவாகி வரும் கனமழை காரணமாக இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், அத்துடன் சில வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
