ஓய்வு பெற்ற பொலிஸாருக்கு கௌரவிப்பு விழா

-சம்மாந்துறை நிருபர்-

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில், நீண்ட காலமாக நாட்டுக்காக தமது சேவையை வழங்கி அண்மையில் ஓய்வு பெற்றுச் சென்ற பொலிஸாரை கௌரவிக்கும் நிகழ்வு சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என்.நிசாந்த பிரதிப்குமாரவின் தலைமையில் நேற்று திங்கட்கிழமை சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றது.

இதன் போது ஓய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு நினைவுச் சின்னங்கள், வாழ்த்துச் சான்றிதழ்கள், மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில், சம்மாந்துறை பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு படை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.