பாதுகாப்பு சுவர் வீட்டின் மீது இடிந்து விழுந்து சேதம்!

பொகவந்தலாவை ஆரியபுரம் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பெய்த கனமழையின் போது, ​​ஒரு வீட்டின் மீது பெரிய பாதுகாப்பு சுவர் இடிந்து விழுந்துள்ளது.

தீபாவளி பண்டிகைக்காக வீட்டில் வசிப்பவர்கள் கொழும்பில் உள்ள ஒரு உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்த வேலையில் இரவு 8:00 மணியளவில் நீடித்த மழையின் போது வீட்டின் பின்னால் கட்டப்பட்ட பாதுகாப்பு சுவர் இடிந்து விழுந்ததாக அயலவர்கள் தெரிவித்தனர்.

பாதுகாப்பு சுவர் இடிந்து விழுந்ததால், வீட்டின் இரண்டு அறைகள் மற்றும் சமையலறைக்கு பலத்த சேதமடைந்துள்ளன.

பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்ததால், வீட்டில் வசிப்பவர்களின் தனிப்பட்ட உடைமைகளும் கடுமையாக சேதமடைந்துள்ளது.

இதற்கிடையில், நோர்வூட் பகுதியில் பெய்த கனமழையால் வடிகால் அமைப்புகள் அடைபட்டதால், மழைநீர் நோர்வூட் நகரத்திற்குள் பாய்ந்து, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.