இந்தியாவிற்கான விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பினார் – ஹரிணி
இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ இராஜதந்திர விஜயத்தை முடித்துக்கொண்டு பிரதமர் கலாநிதி ஹரிணி சூரிய நாடு திரும்பியுள்ளார்.
பிரதமர் நேற்று சனிக்கிமை இரவு கட்டுநாயக்கா,பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு (BIA) வந்தடைந்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் உத்தியோகபூர்வ விஜயமாககலாநிதி ஹரிணி சூரிய கடந்த அக்டோபர் 16 இந்தியாவுக்கு விஜயம் செய்தார்.
இதன்போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அரசியல் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினார் .
இந்த விஜயத்தின் ஒரு பகுதியாக புது டெல்லியிலுள்ள NDTV மற்றும் சிந்தன் ஆராய்ச்சி அறக்கட்டளை இணைந்து ஏற்பாடு செய்த NDTV உலக மாநாட்டில் கலாநிதி ஹரிணி சூரிய முக்கிய உரையை நிகழ்த்தினார்.