ஹட்டனில் திடீர் சுற்றி வளைப்பு

-மஸ்கெலியா நிருபர்-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு New;W rdpf;fpoik ஹட்டd; நகரில் நகரசபையுடன் இணைந்து சுகாதார அதிகாரிகள் திடீர் பரிசோதனை செய்தனர்.

இதன்போது உணவுச்சட்டத்தை மீறிய உணவை கையாளும் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொது சுகாதார உயர் அதிகாரி பி.ஏ.பாஸ்கரன் அம்பகமுவ சுகாதார வைத்திய அதிகாரி
வைத்தியர் சந்ரராஜன், ஹட்டன் பொது சுகாதார பரிசோதகர் சௌந்தர்ராகவன் ஆகியோர் உள்ளிட்ட குழுவினர் பரிசோதனையில் ஈடுபட்டனர்.

ஹட்டன் நகரசபை தலைவர் அசோக்ககருனாரத்னவின் ஒத்துழைப்புடன் தொடர்ந்தும் அடிக்கடி பரிசோதனைகள் முன்னெடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.