தமிழ் மொழிப் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை அறிவிப்பு!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள அனைத்துத் தமிழ் மொழிப் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட மாகாண ஆளுநர்கள் இந்த விடுமுறை தினத்தை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், செவ்வாய்க்கிழமை விடுமுறை வழங்கப்படும் அனைத்துத் தமிழ் மொழிப் பாடசாலைகளின் அதிபர்களுக்கும், எதிர்வரும் சனிக்கிழமை பாடசாலைகளை நடத்துமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை எதிர்வரும் திங்கட்கிழமை கொண்டாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.