
மட்டக்களப்பு-கொழும்பு பிரதான வீதி, மியான்குளம் காட்டு பகுதியில் குடை சாய்ந்த வாகனம்!
மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியின், மியான்குளம் காட்டு பகுதியில், வாகனம் பாதையை விட்டு விலகி குடை சாய்ந்ததில், சாரதி படுகாயம் அடைந்த நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
கெக்கிராவையிலிருந்து இருந்து ஒட்டமாவடி, வாழைச்சேனை பகுதிகளில், மீன் கொள்வனவு செய்வதற்காக வந்த, சிறிய ரக பட்டா வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
வீதியில் கால்நடைகளுக்கு வழி விட்டு, அவற்றை முந்தி செல்ல முற்படுகையில், வாகனம் பாதையை விட்டு விலகி குடை சாய்ந்துள்ளது.
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
