இந்திய பிரதமரை சந்தித்த பிரதமர் ஹரிணி!
இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்துள்ளார்.
இலங்கை பிரதமரை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைவதாக இந்திய பிரதமர் தனது X இல் பதிவிட்டுள்ளார்.
இந்த சந்திப்பின்போது.கல்வி, பெண்கள் அதிகாரமளித்தல், புதுமை, மேம்பாட்டு ஒத்துழைப்பு மற்றும் மீனவர் நலன் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக இந்திய பிரதமரின் X பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.