அங்கவீனமுற்ற நபர்களை தொழில் உட்புகுத்தல் தொடர்பிலான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு

-கிண்ணியா நிருபர்-
அங்கவீனமுற்ற நபர்களை தொழிலில் உட்புகுத்தல் தொடர்பில் வெற்றிகரமாக இணைப்பு செய்யப்பட்ட அங்கவீனமுற்ற நபர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு திருகோணமலை இந்து கலாச்சார மண்டபத்தில் இன்று வியாழக் கிழமை இடம் பெற்றது.

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யு.ஜீ.எம்.ஹேமந்த குமார தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வானது சமூக சேவைகள் திணைக்களமும்,மனித வலு வேலை வாய்ப்பு திணைக்களம் ஜெயிகா ஆகியவற்றின் கூட்டினைந்த வகையில் நடை முறைப்படுத்தப்பட்டது.

இதில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த திருகோணமலை,மட்டக்களப்பு,அம்பாறை ஆகிய பகுதிகளை சேர்ந்த இயலாமையுடைய நபர்கள் பங்கேற்றனர்.

திருகோணமலை மாவட்டத்தில் 22 இயலாமையுடைய நபர்கள் தொழில் வாய்ப்புக்குள் உட்படுத்தப்பட்ட நிலையில் கிழக்கு மாகாணத்தில் 47 வெற்றிகரமான நபர்கள் தொழில் வாய்ப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.

கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டம் இம் முறை முதலிடத்தை பெற்றுள்ளது. மாவட்ட சமூக சேவைகள் இணைப்பாளர் த.பிரணவன் திறம்பட முன்னெடுத்ததால் முதலிடம் கிடைக்கப் பெற்றுள்ளது.

இதன் மூலம் தங்கி வாழாமல் வருமானமீட்டக்கூடியவர்களாக உழைத்து வாழும் நிலை இயலாமையுடைய நபர்களுக்காக இத் திட்டம் பெரிதும் துணை புரிகிறது.

திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் மாவட்டத்தின் அதி கூடிய தொழில்வாய்ப்புக்களாக ஏழு நபர்கள் உள்வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன் மோது குறித்த இயலாமையுடைய நபர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதில் சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளர் திருமதி தர்சணி கருணாரட்ண, மேலதிக பணிப்பாளர், ஜெயிக்கா நிறுவன திட்ட முகாமையாளர், சமூக சேவைகள் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,மனித வலு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.