உளவள ஆலோசனை மற்றும் தொழில்சார் வழிகாட்டல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
உயர்தர மாணவர்களுக்கான உளவள ஆலோசனை மற்றும் தொழில்சார் வழிகாட்டல் விழிப்புணர்வு நிகழ்ச்சி இடம்பெற்றது.
இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சின் கீழ் வரையறுக்கப்பட்ட கூட்டுறவு சமித்தி சங்கமானது தேசிய ரீதியில் பாடசாலை மாணவர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வுகளை நடாத்தி வருகின்றது.
இறக்காமம் பிரதேச செயலக பிரிவில் இச்செயலமர்வானது, கமு/சது/அல்-அமீன் மகா வித்தியாலயத்தில் அண்மையில் நடைபெற்றது.
மேற்படி நிகழ்வானது, Standfold College of Higher Education ஒருங்கிணைப்பின் கீழ் இந்த செயலமர்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இவ் விழிப்புணர்வு செயலமர்விற்கு வளவாளராக உளவளத்துணை உத்தியோகத்தர் ஏ.எச். றகீப் கலந்து சிறப்பித்தார்.
இந்நிகழ்வானது, Standfold College of Higher Education நிறுவனத்தினால் இணைப்பாக்கம் செய்யப்பட்டதுடன் அதன் முகாமையாளர் டி.ஆர். அபு பிர்னாஸ், சந்தைப்படுத்தல் பணிப்பாளர் ஏ.கே. சிஹாப் அஹமட் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும், தொழில் வழிகாட்டல் நிகழ்வானது, திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.வை. றிபாத் (கல்முனை) மற்றும் எம்.கே. ஹனீபா ஆகியோரால் நிகழ்த்தப்பட்டது.