இன்று உலக உணவு தினம்

ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 16 ஆம் திகதி உலக உணவு தினம் கொண்டாடப்படுகிறது.

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (FAO) நிறுவப்பட்ட நாளை நினைவுகூரும் வகையில் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.

உலகம் முழுவதும் உள்ள பசி, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் உணவுப் பாதுகாப்பின்மை ஆகியவற்றைத் தீர்க்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த இது ஒரு சந்தர்ப்பமாக அமைகிறது.

1945 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு நிறுவப்பட்டது.

1979ஆம் ஆண்டில், FAO-ன் 20 வது பொது மாநாட்டில், இந்த நாளை உலக உணவு தினமாக அறிவிக்க உறுப்பு நாடுகள் ஒப்புக்கொண்டன.

உலகெங்கிலும் உணவு கிடைக்காமல் அவதிப்படும் மக்களுக்கு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த ஆண்டின் (2025) உலக உணவு தினத்தின் கருப்பொருளாக “சிறந்த உணவு மற்றும் சிறந்த எதிர்காலத்திற்காக கைகோர்ப்போம்” என்பதாகும்.