ஹட்டன் பன்மூர் தமிழ் மகா வித்தியாலயத்தில் தூய்மையான குடிநீர் வழங்கல் திட்டம்

-மஸ்கெலியா நிருபர்-

ஹட்டன் பன்மூர் தமிழ் மகா வித்தியாலயத்திற்கான தூய்மையான குடிநீர் வழங்கல் திட்டம் மாணவர்கள் பாவனையாக நேற்று புதன்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்டது.

இத்திட்டம் சின்னத்தம்பி குடும்ப அறக்கட்டளை அமைப்பின் பூரண நிதிப் பங்களிப்போடு, அனைத்துலகமருத்துவ நல அமைப்பினால் (IMHO) நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்நிகழ்வு பன்மூர் தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபர் மற்றும் பாடசாலை சமூகம் ஆகியோரின் சிறப்பான ஒழுங்குபடுத்தலில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஹட்டன் வலய கல்வி பணிப்பாளர் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
சிறப்பு விருந்தினர்களாக IMHO அமைப்பின் திட்ட பணிப்பாளர் திரு கந்தையா விக்னேஸ்வரன், IMHO அமைப்பின் பெருந்தோட்டக் கல்விகான இணைப்பாளர், IMHO அமைப்பின் நீர் மற்றும் சுகாதாரத் திட்ட பொறுப்பதிகாரி, மற்றும் கல்வித் திட்ட பொறுப்பதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இத்திட்டம் 130 அடி கொண்ட ஆழ்துளை கிணறு உட்பட 2 கை கழுவும் அமைப்புகளோடு, பாடசாலை முழுவதும் நீர் குழாய் இணைப்புகள் மற்றும் 5000 லீட்டர் கொள்ளவு கொண்ட நீர் தாங்கி கொண்டு அமைக்கப்பட்டு முழுமைப்படுத்தபப்பட்டுள்ளது.

இத்திட்டம் பெருந்தோட்ட பாடசாலைகளின் கல்வி மற்றும் சுகாதார முன்னேற்றத்திற்கான முக்கியமான ஒரு சாதனையாகும்.