இந்திய மகளிர் அணிக்கு அபராதம்
மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் இடம்பெற்று வருகிறது.
இந்த தொடரில் கடந்த 12ஆம் திகதி விசாகப்பட்டினத்தில் இடம்பெற்ற போட்டியில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதின.
இந்த போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.
இந்தநிலையில், குறித்த போட்டியில் மெதுவாக பந்துவீசிய காரணத்தினால் இந்திய அணிக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 5 சதவீதம் அபராதம் விதித்துள்ளதாக ஐ.சி.சி. அறிவித்துள்ளது