கரூர் சம்பவம்: நினைவேந்தல் நடத்த விஜய் உத்தரவு
தமிழகத்தின் கரூரில் தமிழக வெற்றிக்கழகம் நடத்திய பிரசாரக் கூட்டமொன்றில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இதன்படி கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நினைவேந்தல் நடத்த வேண்டும் என தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கமைய தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அந்தந்த மாவட்டங்களில் நினைவேந்தல் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என விஜய் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், 41 பேரின் படங்களுக்கு மலர்தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் மௌன அஞ்சலி செலுத்த வேண்டும் என நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளார்.