சிறைச்சாலை கைதியிடம் தொலைபேசி

அங்குனுகொலபெலெஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவரிடமிருந்து கையடக்கத் தொலைபேசி மற்றும் இரண்டு சிம் அட்டைகள் சிறைச்சாலை அதிகாரிகளால் கடந்த திங்கட்கிழமை கைப்பற்றப்பட்டுள்ளன.

சிறைச்சாலை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போதே கைதியிடமிருந்து இந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

போதைப்பொருள் குற்றம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவரிடமிருந்தே இந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக சிறைச்சாலை பொறுப்பதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.