தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை மற்றும் கலாசார பீடத்தின் புவியியல் துறையின் ஏற்பாட்டில் புவி தகவல் நுட்பம் (Geo-Informatics) குறுங்கால பாடநெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை கலை மற்றும் கலாசார பீடத்தின் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைடீன் உள்ளிட்ட அதிதிகள் கலந்து கொண்டு உரையாற்றியதுடன் மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கி வைத்தனர்.

இங்கு கலை மற்றும் கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எம்.எம். பாஸில் விஷேட உரை ஒன்றினை நிகழ்த்தினார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழக கலைக் கலாசாரப் பீடத்தின் புவியியல் துறை சார்பாக நடத்திய Geo-Informatics குறுங்கால பாடநெறி கடந்த 2025 செப்டம்பர் 13 முதல் ஒக்டோபர் 4 வரை ஏழு தொடர்ச்சியான வார இறுதி நாட்களில் தகவல் தொழில்நுட்பத் துறையின் கணினி ஆய்வகத்தில் இடம்பெற்றிருந்தது.

நிகழ்வில் சமூகவியல் துறையின் தலைவர் கலாநிதி எம். றிஸ்வான், சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.எல். பௌசுல் அமீர், சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.எச். முகம்மட் றினோஸ், சிரேஷ்ட விரிவுரையாளர் கே. நிஜாமிர் உள்ளிட்ட விரிவுரையாளர்களும் மாணவர்களும் பங்கு கொண்டிருந்தனர்.