பிரதியமைச்சர் மற்றும் பொலிஸ் பொறுப்பதிகாரி உள்ளிட்டோர் கள விஜயம்

-மூதூர் நிருபர்-

திருகோணமலை ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரிக்கு முன்பாக கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பாகவும் பாடசாலை விடுகின்ற நேரங்களில் மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பாகவும் ஆராயும் நோக்கில் குறித்த பகுதிக்கு இன்றைய தினம் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா மற்றும் தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்டோர் விஜயம் மேற்கொண்டு குறித்த விடயம் தொடர்பாகவும் நெரிசலைக் குறைக்கும் வாகன போக்குவரத்திற்கான வழிமுறைகள் தொடர்பாகவும் ஆராய்ந்தனர்.